குப்பை உரம் 1 கிலோ ரூ.5க்கு விற்பனைகொள்முதல் செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
குப்பை உரம் 1 கிலோ ரூ.5க்கு விற்பனைகொள்முதல் செய்ய விவசாயிகளுக்கு அழைப்புப.வேலுார்:'ப.வேலுார் டவுன் பஞ்சாயத்தில் இயற்கை உரம் தயாரித்து, ஒரு கிலோ, ஐந்து ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறது. தேவைப்படும் விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளலாம்' என, செயல் அலுவலர் மூவேந்திர பாண்டியன் அழைப்பு விடுத்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ப.வேலுார் டவுன் பஞ்சாயத்துக்குட்பட்ட, 18 வார்டுகளிலும் வீடு, கடைகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பையை, பழைய பைபாஸ் சாலயில் உள்ள குப்பை கிடங்கில் தரம் பிரித்து, இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. விவசாயத்தில் ரசாயன பயன்பாட்டை குறைக்கும் நோக்கில், இயற்கை உரம் பயன்படுத்த உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு அரசு அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, ப.வேலுார் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் தரம் பிரிக்கப்பட்ட குப்பையிலிருந்து இயற்கை உரம் தயாரித்து, 'செழிப்பு' என்ற பெயரில் மக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.இதை வெறும் உரமாக வழங்காமல், மண்வளத்தை மேம்படுத்தும் தழை, மணி, சாம்பல் சத்து ஆகிய முன்னோட்டங்களை சேர்த்து, இயற்கை உரமாக மாற்றி வழங்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் வழிகாட்டுதல்படி, உரம் தயாரிப்பில் கவனம் செலுத்தி வருகிறோம். அவ்வாறு தயாரித்த உரம், ப.வேலுார் டவுன் பஞ்சாயத்து சார்பில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இயற்கை உரம் ஒரு கிலோ, ஐந்து ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தேவைப்படும் பொதுமக்கள், விவசாயிகள் ப.வேலுார் டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தை தொடர்பு கொண்டு பெற்று பயனடையலாம்.மேலும், இதுகுறித்து ப.வேலுார் டவுன் பஞ்சாயத்து துப்பரவு மேற்பார்வையளர்கள் வெங்கடேஷ், தாமரைச்செல்வி, ஜனார்த்தனன் ஆகியோரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.