மேலும் செய்திகள்
முத்தங்கியில் ஜொலித்த ஆஞ்சநேயர்
28-Feb-2025
வரும் 12ல் கமலாலய குளத்தில் தெப்ப திருவிழாமுன்னேற்பாடு பணிகள் மும்முரம்நாமக்கல்:நாமக்கல் நகரின் மத்தியில் கமலாலய குளம் அமைந்துள்ளது. புராண காலத்தில், நாமகிரித்தாயார், இந்த குளத்தின் கரையில் தவம் இருந்ததாகவும், அப்போது அங்கு வந்த ஆஞ்சநேயர், தன் கையில் கொண்டுவந்த சாலக்கிராமத்தை, தாயார் கையில் கொடுத்துவிட்டு, குளத்தில் தண்ணீர் அருந்த சென்றதாகவும், அப்போது தாயார் அந்த சாலக்கிராமத்தை தரையில் வைத்ததால், அது நாமக்கல் மலையாக உருவெடுத்ததாக வரலாறு கூறுகிறது.தற்போதும், கமலாலய குளத்தின் அடிப்பகுதியில் ஆஞ்சநேயரின் பாத சுவடுகளை காண முடிகிறது. நாமக்கல் மலைக்கு மேற்கே, மலையை குடைந்து நாமகிரித்தாயார் உடனுறை லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில் குடவறை கோவிலாக அமைந்துள்ளது. அதன் எதிரில் மலையையும், தெய்வங்களையும் வணங்கிய நிலையில், ஆஞ்சநேயர் சுவாமி எழுந்தருளி அருள்பாலிக்கிறார். மலையின் கிழக்கு பகுதியில், அரங்கநாயகி தாயார் உடனுறை ரங்கநாதர் கோவில் குடவறை கோவிலாக அமைந்துள்ளது.இங்கு, கார்க்கோடன் என்ற பாம்பின் மீது அனந்தசயன நிலையில் ரங்கநாதர் சுவாமி எழுந்தருளி அருள்பாலிக்கிறார். முப்பெரும் தெய்வங்களை கொண்டுள்ள நாமக்கல்லில், ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தில், முப்பெரும் தேர்த்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும்.மலையின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள புராண சிறப்பு பெற்ற கமலாலய குளத்தில், 100 ஆண்டுகளுக்கு முன், தெப்பத்தேர் நடந்ததாக கூறப்படுகிறது. அதன்பின், தெப்பத்தேர் திருவிழா நடக்கவில்லை. அங்கு தெப்பத்தேர் திருவிழா நடத்த வேண்டும் என்ற பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, இந்தாண்டு தெப்பத்தேர் திருவிழா நடத்த, முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் அனுமதி அளித்துள்ளனர்.அதன்படி, வரும், 12 மாலை, 5:30 மணிக்கு கமலாலய குளத்தில் தெப்பத்தேர் திருவிழா நடக்கிறது. அதற்காக தெப்பத்தேர் உருவாக்கும் பணிகள், கடந்த, இரண்டு நாட்களாக முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் தெப்ப உற்சவம் நடக்கிறது. அங்கு தெப்பம் அமைக்கும் தொழிலாளர், ஆறு பேர், நாமக்கல் வந்து, கமலாலய குளத்தில் தெப்பத்தேர் உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.அதற்காக, 150 இரும்பு பேரல்களை கொண்டு தெப்பத்தேர் தயாரித்து, அதை குளத்தில் வெள்ளோட்டம் விட்டுப்பார்த்தனர். தற்போது, தெப்பத்தேரில் அலங்காரம் நடந்து வருகிறது. வரும், 12 மாலை, 5:00 மணிக்கு, சுவாமிகளை தெப்பத்தேரில் வைத்து பட்டாச்சாரியார்கள் சிறப்பு பூஜை செய்வர். தொடர்ந்து தெப்பத்தேர் கமலாலயத்தில் உலா வரும்.
28-Feb-2025