மேலும் செய்திகள்
மதுபாட்டில் பதுக்கிய 2 பேருக்கு 'காப்பு'
05-Mar-2025
மது, லாட்டரி விற்ற2 பேருக்கு 'காப்பு'குமாரபாளையம்:குமாரபாளையம் பகுதியில் சட்டத்துக்கு விரோதமாக, மது பாட்டில்களை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையிலான போலீசார், ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, பழைய முருகன் தியேட்டர் அருகே, விட்டலபுரி, பஸ் ஸ்டாண்ட், ஆனங்கூர் பிரிவு ஆகிய பகுதிகளில் மது விற்ற, பிரவீன்குமார், 26, தன்ராஜ், 29, செந்தில்குமார், 35, பூமிநாதன், 48, ஆகிய நால்வர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து, 108 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இதேபோல், லாட்டரி விற்றுக்கொண்டிருந்த பரமசிவம், 58, ராமலிங்கம், 26, ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து விற்பனைக்கு வைத்திருந்த லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
05-Mar-2025