சேந்தையில் 60,466 பேருக்கு ரேஷன் பொருட்கள் வழங்கல்
'சேந்தை'யில் 60,466 பேருக்கு ரேஷன் பொருட்கள் வழங்கல்சேந்தமங்கலம்,:பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் வேட்டி, சேலை, பொங்கல் பொருட்கள், முழு கரும்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல், சேந்தமங்கலம் தாலுகாவில் உள்ள, 96 ரேஷன் கடைகளில் உள்ள, 60,466 ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை, பொங்கல் பொருட்கள், முழு கரும்பு வழங்கும் பணி நடந்து வருகிறது. சேந்தமங்கலம் டவுன் பஞ்சாயத்தில் உள்ள, 7 ரேஷன் கடைகளிலும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பொருட்கள் வழங்கும் பணியை, டவுன் பஞ்., தலைவர் சித்ரா தலைமை வகித்து துவக்கி வைத்தார். துணைத்தலைவர் ரகு, முன்னாள் பேரூர் செயலாளர் பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.