உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / துலுக்க சூடாமணியம்மன்கோவிலில் 9ல் தேரோட்டம்

துலுக்க சூடாமணியம்மன்கோவிலில் 9ல் தேரோட்டம்

துலுக்க சூடாமணியம்மன்கோவிலில் 9ல் தேரோட்டம்ராசிபுரம்:நாமகிரிப்பேட்டை அடுத்த ஆர்.புதுப்பட்டியில் துலுக்க சூடாமணியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம், கடைசி வாரம் தேர் திருவிழா நடப்பது வழக்கம். அதன்படி, வரும் ஏப்., 6ல் தேர் திருவிழாவிற்கான கொடியேற்றம் நடக்கிறது.முதல் நாள் சுவாமி அன்னவாகனத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தினமும் ஒவ்வொரு வாகனத்தில் அம்மன் ஊர்வலம் வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும், 9 காலை, 10:00 மணிக்கு திருத்தேர் உற்சவம் நடக்கிறது. 10 இரவு சப்தாபரணம், 11ல் கம்பம் எடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.தேர் திருவிழாவிற்கு சுற்று வட்டார பகுதியை சேர்ந்த கிராம மக்கள் ஒன்று கூடுவதால், இப்பகுதியிலேயே தற்காலிக போலீஸ் ஸ்டேஷன், ராசிபுரம் நீதிமன்றம் ஆகியவை இரண்டு நாட்கள் நடக்கும். இங்கு வரும் வழக்குகளை உடனுக்குடன் நடத்தி தீர்வு காண இந்த பழக்கம் ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே உள்ளது.சிறப்பு பஸ், சுகாதாரத்திற்கு அரசு மருத்துவமனை என, அனைத்து ஏற்பாடுகளையும் விழாக்குழுவினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ