மெக்கானிக்கை கொல்ல முயற்சி தந்தை, மகன் மீது வழக்கு
ப.வேலுார்:நாமக்கல், நல்லுார் சின்னம நாயக்கன்பட்டி அருகே, சுங்ககாரன்-பட்டியை சேர்ந்த பழனிசாமி மகன் கேசவன், 35; டூவீலர் மெக்-கானிக். இவருக்கும், வீட்டின் அருகே வசிக்கும் முருகேசன் குடும்பத்தாருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், வீட்டின் அருகே உள்ள தன் விவசாய தோட்டத்தில், கேசவன் நின்றிருந்தார் அப்போது, அங்கு டிராக்டரில் வந்த முருகேசன், இவரது மகன் நிதீஷ் குமார், உறவினர் தனசேகரன் ஆகிய மூவரும் சேர்ந்து, டிராக்டரை வேகமாக ஓட்டிச்சென்று கேசவன் மீது ஏற்றி கொலை செய்ய முயன்றனர். அதிர்ஷ்டவசமாக கேசவன் உயிர் தப்பினார். இதுகுறித்து, வீடியோ ஆதாரத்துடன் கேசவன் அளித்த புகார்படி, நல்லுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான முருகேசன், நிதீஷ்குமார், தனசேகரன் ஆகிய மூவரை தேடி வருகின்றனர்.