உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மேட்டூர் அணை நீர் இருப்பு சரிவு

மேட்டூர் அணை நீர் இருப்பு சரிவு

மேட்டூர் அணைநீர் இருப்பு சரிவுமேட்டூர், ஆக. 30-மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. கடந்த ஜூலை, 30ல் அணை நிரம்பிய நிலையில் உபரிநீர், 16 கண் மதகு வழியே வெளியேற்றப்பட்டது. கர்நாடகா அணைகளில் திறக்கப்பட்ட நீர் அளவு குறைந்ததால் கடந்த, 20ல், 120 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம், 21ல், 119 அடியாக சரிந்தது.அணையில் இருந்து பாசனத்துக்கு வினாடிக்கு, 12,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. வரத்தை விட திறப்பு கூடுதலாக உள்ளதால் தொடர்ந்து நீர்மட்டம் சரிகிறது. அதன்படி நேற்று அணை நீர்மட்டம், 116.46 அடி, நீர் இருப்பு, 87.93 டி.எம்.சி.,யாக இருந்தது. 9 நாட்களில் நீர்மட்டம், 4 அடி, நீர் இருப்பு, 6 டி.எம்.சி., குறைந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ