உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / குழாய் திருடிய முதியவர் கைது

குழாய் திருடிய முதியவர் கைது

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அடுத்த வடுகம் தோப்புக்காட்டை சேர்ந்தவர் கந்தசாமி மகன் முத்துகுமார், 42; இவர், தோட்டத்தில் இருந்த, 6 அடி நீள குழாயை, பக்கத்து தோட்டத்தை சேர்ந்த சடையன் மகன் சுப்ரமணி, 69, நேற்று முன்தினம் இரவு எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார்.நேற்று காலையில், குழாய் இல்லாததால் முத்துக்குமார் தேடியுள்ளார். அப்போது, சுப்ரமணி வீட்டில் குழாய் இருந்ததை பார்த்து முத்துகுமார் கேட்டார். இதில் ஆத்திரமடைந்த சுப்ரமணி, முத்துகுமாருக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து முத்துகுமார் கொடுத்த புகார்படி, நாமகிரிப்பேட்டை போலீசார், சுப்ரமணியை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ