உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நாமக்கல் மண்டலத்தில் 4 வகை முட்டை நீக்கம் 2 வகைகளாக மட்டுமே கொள்முதல்: நெக் தலைவர்றா

நாமக்கல் மண்டலத்தில் 4 வகை முட்டை நீக்கம் 2 வகைகளாக மட்டுமே கொள்முதல்: நெக் தலைவர்றா

நாமக்கல்: 'தற்போது நடைமுறையில் உள்ள, நான்கு வகை முட்டைகள், நாமக்கல் மண்டல வணிகத்திலிருந்து முற்றிலுமாக நீக்கப்பட்டு, இரண்டு வகைகளாக மட்டுமே கொள்முதல் செய்யப்படும்' என, தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழுவின், நாமக்கல் மண்டல தலைவர் சிங்கராஜ் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, நேற்று முதல், நாமக்கல்லில், 'நெக்' அறிவிக்கப்படும் விலையே முட்டை வியாபாரிகள் வாங்கும் விலையாக இருக்கும்' என்பது நடைமுறைக்கு வந்துள்ளது.நாமக்கல் மண்டலம் தவிர, ஹோஸ்பெட், ஐதராபாத், விஜய-வாடா, வெஸ்ட் கோதாவரி, தணுகு உள்ளிட்ட மண்டலங்களில், 51 கிராம் மற்றும் அதற்கு மேற்பட்ட எடையுள்ள அனைத்து முட்-டைகளும், பெரிய முட்டைகளாக கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. நாமக்கல் மண்டலத்தில் மட்டும் தான், ஏழு வகைக-ளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொன்றும் ஒவ்வொரு விலைக்கு வியா-பாரிகளால் வாங்கப்பட்டு வருகிறது.தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு(நெக்) அறிவிக்கும் விலையே, வியாபாரிகள் வாங்கும் விலையாக நடைமுறைப்படுத்-தப்பட வேண்டும் என்றால், முதலில் நாமக்கல்லில் நடைமு-றையில் உள்ள, ஏழு வகை முட்டை முறையை நீக்கி, ஐதராபாத் உள்ளிட்ட மற்ற இந்திய, 'நெக்' மண்டலங்களில் உள்ள நடைமு-றைபோல், இரண்டு வகைகளாக விற்க பழகிக்கொள்ள வேண்டும். அவ்வாறு நடைமுறைப்படுத்தினால் மட்டுமே நம்மால், 'நோ மைனஸ் நெக் ரேட்' என்ற கொள்கை மாற்றத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச்செல்ல முடியும்.அதனால், நாமக்கல் மண்டல முட்டை கோழிப்பண்ணையா-ளர்கள், இன்று (நேற்று) முதல், முட்டைகளை வியாபாரிகளுக்கு விற்கும்போது, 51 கிராம் மற்றும் அதற்கு மேற்பட்ட எடையுள்ள முட்டைகளை, பெரிய முட்டைகளாக, 'நெக்' அறிவிக்கும் விலைக்கே விற்பனை செய்ய அறிவுறுத்தப்படுகின்றனர். இதன் மூலம், தற்போது நடைமுறையில் உள்ள எக்ஸ்போர்ட் சைஸ், கரெக்ட் சைஸ், பெரிய முட்டை, ஓவர் சைஸ் முட்டை என்ற, நான்கு வகைகள், நாமக்கல் மண்டல வணிகத்திலிருந்து முற்றிலுமாக நீக்கப்படுகிறது. 51 கிராம் மற்றும் அதற்கு மேற்-பட்ட எடையுள்ள அனைத்து முட்டைகளும், 'பெரிய முட்டை' என்ற ஒரே வகைக்குள் மற்ற மண்டலங்களை போலவே நடைமு-றைப்படுத்தப்படும்.எக்ஸ்போர்ட் முட்டைகள், கரெக்ட் சைஸ் முட்டைகள் என்று தனித்தனியே குறைத்து விற்கும்போது, கண்டிப்பாக பெரிய முட்-டைகளை, 'நெக்' அறிவிக்கும் விலைக்கு விற்பதில் சிரமம் ஏற்-படும். இவற்றை கருத்தில் கொண்டே இந்த மாற்றம் அமலுக்கு வருகிறது. அதனால், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு(நெக்), அறி-விக்கும் விலையே, வியாபாரிகள் வாங்கும் விலையாக நடைமு-றைப்படுத்துவதில், அனைத்து முட்டை கோழிப் பண்ணையாளர்-களும் ஒத்துழைப்பு அளித்து, முட்டை கோழிப்பண்ணை தொழிலை திறம்பட நடத்தி, வாழ்வாதாரத்தை காத்துக்கொள்ள இணைந்து செயல்பட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை