சோதனையில் நிற்காத மாணவனுக்கு அபராதம்
குடியாத்தம்: வேலுார் மோட்டார் வாகன அலுவலர் சம்பத்குமார், குடியாத்தம் முதல்நிலை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணா ஆகியோர், குடியாத்தம் அடுத்த அம்மனாங்குப்பம் பகுதியில் நேற்று வாகன தணிக்கை நடத்தினர். அப்போது ஒரே பைக்கில் வந்த மூன்று பேரை தடுத்தனர். ஆனால், சாலையோரம் நிறுத்தப்-பட்டிருந்த மோட்டார் வாகன அலுவலரின், கார் டிரைவரை தள்ளிவிட்டு, பைக்கிலிருந்த இரு-வரை இறக்கி விட்டு, ஓட்டி வந்த வாலிபர் பறந்தார்.குடியாத்தம் டவுன் போலீசார் விசாரணையில், பைக்கில் தப்பிய நபர், கல்லுாரி மாணவர் என தெரிந்தது. அவரை வரவழைத்து லைசென்ஸ் இல்லாமல் பைக் ஓட்டியது, ஆபத்தான பயணம், ஹெல்மெட் அணியாமல் ஓட்டியதற்காக, 10,000 ரூபாய் அபராதம் விதித்து, அறிவுரை கூறி அனுப்பினர்.