நாமக்கல் பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
நாமக்கல்: நாமக்கல் மாநகராட்சி கமிஷனர் மகேஸ்வரி, நேற்று முன்தினம் பஸ் ஸ்டாண்டில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பஸ் ஸ்டாண்டில் பல இடங்களில் கடைக்காரர்கள் நடைபாதையில் கடை விரித்து, பயணிகள் நடந்து செல்ல இடை-யூறாக இருப்பது தெரியவந்தது. அதை தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார். அவ-ரது உத்தரவுப்படி, நேற்று காலையில், நாமக்கல் பஸ் ஸ்டாண்டில் போக்குவரத்துக்கும், பொது-மக்களுக்கும் இடையூறாக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கடைகளை நகராட்சி அலுவலர்கள் அகற்றினர். இதில் தற்காலிக ஷெட் அமைத்து செயல்பட்டு வந்த, 5 கடைகள் அகற்றப்பட்டன. இதேபோல், பஸ் ஸ்டாண்டிற்குள் நிறுத்தப்பட்டி-ருந்த இருசக்கர வாகனங்களும் அப்புறப்படுத்தப்-பட்டன.