மேலும் செய்திகள்
விழிப்புணர்வு வினாடி வினா
15-Aug-2024
நாமக்கல், நாமக்கல் பூங்கா சாலையில், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில், எச்.ஐ.வி., எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் தொற்று குறித்த விழிப்புணர்வு பிரசாரம் -நடந்தது.கலெக்டர் உமா தலைமை வகித்து, தொடங்கி வைத்தார். அதில், கல்லுாரி மாணவ, மாணவியர், தன்னார்வலர்கள் உள்ளிட்ட, 300-க்கும் மேற்பட்டோர், மனித சங்கிலியாக நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து, பயணியர் ஆட்டோக்களில் விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.மேலும், வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில் அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது. நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி முதல்வர் சாந்தா அருள்மொழி, மாவட்ட நல அலுவலர் பூங்கொடி உள்பட பலர் பங்கேற்றனர்.
15-Aug-2024