உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கண்டன ஆர்ப்பாட்டம்

கண்டன ஆர்ப்பாட்டம்

நாமக்கல்: மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு, அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் சார்பில், நாமக்கல் எல்.ஐ.சி., கிளை அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க, நாமக்கல் கிளை செயலாளர் செல்வ குமரன் தலைமை வகித்தார். வங்கி ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி, பொதுச்செயலாளர் வெங்கட்ட சுப்ரமணியம், பொருளாளர் குமாரசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். காப்பீட்டுத் துறையில், 100 சதவீதம் அந்நிய நேரடி முதலீடுகளை அனுமதிக்கும் மசோதாவை கைவிட வேண்டும் என்பது உள்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை