இன்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு துவக்கம்
இன்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு துவக்கம்நாமக்கல்:நாமக்கல் மாவட்டத்தில் இன்று (மார்ச் 28) தொடங்கும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை, 19,342 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர்.தமிழகம் முழுவதும் இன்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குகிறது. நாமக்கல் மாவட்டத்தில் இந்தாண்டு 210 பள்ளிகளை சேர்ந்த, 10 ஆயிரத்து, 5 மாணவர்கள், 9,033 மாணவியர், 304 தனித்தேர்வர்கள் என மொத்தம் 19 ஆயிரத்து, 342 மாணவ, மாணவிகள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ளனர்.மாவட்டத்தில் மொத்தம், 92 தேர்வு மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 94 முதன்மை கண்காணிப்பாளர்கள், 24 வழித்தட அலுவலர்கள், 6 வினாத்தாள் கட்டுப்பாட்டு அலுவலர்கள் மற்றும் 1,698 அறை கண்காணிப்பாளர்கள் ஈடுபடஉள்ளனர்.நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு என மூன்று மையங்களில் வினாத்தாள்கள் வைக்கப்பட்டு உள்ளன. வினாத்தாள் வைக்கப்பட்டுள்ள அறை, பூட்டி சீல் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று தேர்வு மையங்களில் மாணவர்களின் ஹால் டிக்கெட் எண்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை, ஆசிரியர்கள் மேஜைகளில் ஒட்டும் பணியில் ஈடுபட்டனர்.