உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிமாவட்டத்தில் 1,400 ஆசிரியர் பங்கேற்பு

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிமாவட்டத்தில் 1,400 ஆசிரியர் பங்கேற்பு

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிமாவட்டத்தில் 1,400 ஆசிரியர் பங்கேற்புநாமக்கல்:பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி, நேற்று தொடங்கியது. அதில், மாவட்டம் முழுவதும், 1,400 ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.தமிழகத்தில், பிளஸ் 2 பொதுதேர்வு, கடந்த, 3ல் தொடங்கி, 25ல் முடிந்தது. இந்த தேர்வை, எட்டு லட்சத்து, 2,157 மாணவ, மாணவியர் எழுதியுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில், பிளஸ் 2 தேர்வை, 18,461 பேர், பிளஸ் -1 தேர்வை, 18,966 மாணவ, மாணவியர் எழுதினர்.நாமக்கல் - திருச்செங்கோடு சாலை, சி.எம்.எஸ்., கல்லுாரி வளாகத்தில் உள்ள, 'ஸ்பைரோ' சி.பி.எஸ்.இ., பள்ளி வளாகம், திருச்செங்கோடு வித்யவிகாஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ராசிபுரம் எஸ்.ஆர்.வி., எக்ஸல் மேல்நிலைப்பள்ளி என, மூன்று மையங்களில் விடைத்தாள் திருத்தப்படுகிறது.விடைத்தாள் திருத்தும் மையங்களின் முகாம் அலுவலராக, நாமக்கல்லுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, திருச்செங்கோட்டிற்கு மாவட்ட கல்வி அலுவலர் கற்பகம், ராசிபுரத்திற்கு, தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலர் ஜோதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.இப்பணியில், அரசு, தனியார் பள்ளிகளில் பணியாற்றும் முதுகலை ஆசிரியர்கள், 1,400 பேர் ஈடுபட்டுள்ளனர். பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணி, வரும், 11ல் தொடங்கி, 30ல் முடிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ