அனுமதியின்றி மண் அள்ளிய 2 பேர் கைது
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை யூனியன், பெரியகோம்பை பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் மண் அள்ளுவதாக வருவாய்த்துறையின-ருக்கு புகார் சென்றது. இதையடுத்து, ஆர்.ஐ., புஷ்பா தலை-மையில் வருவாய்த்துறையினர், நேற்று வாகன தணிக்கையில் ஈடு-பட்டனர். அப்போது, மண் அள்ளி வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், அனுமதியின்று மண் அள்ளி வந்தது தெரிந்தது. இதையடுத்து, டிப்பர் லாரி மற்றும் அதன் உரிமையாள-ரான பெரப்பன்சோலையை சேர்ந்த ராமராஜ் மகன் கலைச்-செல்வன், 45, டிரைவரான மூலக்குறிச்சியை சேர்ந்த அன்பரசு, நல்லுசாமி, 40 ஆகியோரை ஆயில்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஆர்.ஐ., புஷ்பா கொடுத்த புகார்படி, ஆயில்பட்டி போலீசார், இருவரையும் கைது செய்தனர்.வெறிநாய் கடித்து ஆடு உயிரிழப்புஇழப்பீடு கேட்டு விவசாயி தர்ணாபள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, களியனுாரை சேர்ந்தவர் மகேஸ்வரன், 50; ஆடு, கோழி வளர்த்து வருகிறார். இவர், நேற்று மதியம் ஆடு-களை மேய்த்துகொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த வெறிநாய், ஆடுகளை துரத்தி கடித்தது. இதில் ஒரு ஆடு இறந்-தது. அதிர்ச்சியடைந்த மகேஸ்வரன், இறந்த ஆட்டை எடுத்துக்-கொண்டு, ஆவத்திபாளையத்தில் உள்ள களியனுார் பஞ்., அலுவ-லகத்திற்கு சென்றார்.அங்கு அலுவலகம் முன் இறந்த ஆட்டை வைத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பள்ளிப்பாளையம் போலீசார் பேச்சு-வார்த்தை நடத்தினர். அப்போது, மகேஸ்வரன், 'வெறிநாய் கடித்து இறந்த ஆட்டிற்கு இழப்பீடு வழங்க வேண்டும். வெறி-நாய்களை பிடிக்க வேண்டும்' என, கோரிக்கை வைத்தார். இதுகு-றித்து நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் தெரிவித்ததை-யடுத்து, மகேஸ்வரன், தர்ணா போராட்டத்தை கைவிட்டார்.