21ல் தி.மு.க., மாணவர் அணிக்கு நேர்காணல்
21ல் தி.மு.க., மாணவர்அணிக்கு நேர்காணல்நாமக்கல், செப். 18-'வரும், 21ல், தி.மு.க., மாணவர் அணிக்கான நேர்காணல் நடக்கிறது. அதில், விண்ணப்பித்த அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்' என, எம்.பி.,யும், நாமக் கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான ராஜேஸ்குமார் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: தி.மு.க., மாணவர் அணி செயலாளர் அறிவித்துள்ளபடி, நாமக்கல் கிழக்கு மாவட்டத்திற்கான ஒன்றிய, நகர, டவுன் பஞ்., மாணவர் அணிக்கான நேர்காணல், வரும், 21 காலை, 8:00 மணிக்கு, கிழக்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடக்கிறது. மாநில மாணவர் அணி இணைச்செயலாளர் மோகன், துணை அமைப்பாளர்கள் தமிழரசன், பொன்ராஜ், கோகுல் ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். நேர்காணலுக்கு விண்ணப்பித்த அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். மாணவர் அணிக்கு விண்ணப்பித்துள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள், கல்விச்சான்றிதழ் மற்றும் உரிய சான்றுகளுடன் குறிப்பிட்டுள்ள நேரத்தில் பங்கேற்க வருகை தரவேண்டும். வரும்போது, உறுப்பினர் அட்டை, கட்சியில் ஆற்றிய பணிகள் குறித்த விபரங்களை எடுத்து வரவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.