உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 3,200 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்ஒருவர் சிக்கினார்: இருவருக்கு வலை

3,200 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்ஒருவர் சிக்கினார்: இருவருக்கு வலை

குமாரபாளையம் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க, நாமக்கல் மாவட்டத்தில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார், தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, எஸ்.ஐ., ஆறுமுக நயினார் தலைமையிலான போலீசார், சாணார்பாளையம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக வந்த, 'தோஸ்த்' சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ய முயன்றனர். அப்போது, அந்த வாகனத்திலிருந்த மூவரில், இரண்டு பேர் தப்பி ஓடினர். ஆவத்திபாளையம் பகுதியை சேர்ந்த குமரேசன் என்பவரை பிடித்தனர். தொடர்ந்து, வாகனத்தில் சோதனையிட்ட போது, தலா, 50 கிலோ எடையுள்ள, 64 சாக்கு மூட்டைகளில் இருந்த, 3,200 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும், குமரேசனை கைது செய்தனர். தப்பி ஓடிய டிரைவர் சீனிவாசன், பிரபு ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.மாணவர் பலிநாமக்கல் சேந்தமங்கலம், புதுார் காலனியை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் வரதராஜ், 21. இவர், தனியார் கல்லுாரியில், 3-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று வரதராஜூக்கு பிறந்தநாள். காலை, 10:00 மணிக்கு, 'யமஹா' பைக்கிள், கோவிலுக்கு சென்றார். நாமக்கல் நல்லிபாளையம் புறக்காவல் நிலையம் அருகே, சென்று கொண்டிருந்தார். அப்போது, முன்னால் சென்ற சரக்கு ஆட்டோவை ஓவர் டேக் செய்தபோது, எதிரே வந்த மற்றொரு சரக்கு ஆட்டோ, பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த வரதராஜ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நல்லிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ