உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 5 ஆண்டுக்கு பின் கோவில் திறப்பு ஒரு பிரிவினர் மட்டும் வழிபாடு

5 ஆண்டுக்கு பின் கோவில் திறப்பு ஒரு பிரிவினர் மட்டும் வழிபாடு

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் அருகே, மாமுண்டி கிராமத்தில் உள்ள பெரிய மாரியம்மன் கோவிலில், இரு பிரிவினரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால், கடந்த, ஐந்து ஆண்டுகளாக பூஜை செய்யாமல் பூட்டி வைக்கப்பட்டிருந்தது.இது சம்பந்தமான வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், கடந்த ஜன., 21ல் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், இரு பிரிவினரிடையே அமைதி பேச்சுவார்த்தை நடந்தது.இதையடுத்து, நேற்று, தாசில்தார் விஜயகாந்த், ஆர்.ஐ., மல்லிகா, வி.ஏ.ஓ., ரவி, தக்கார் கிருஷ்ணன், மல்லசமுத்திரம் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், எஸ்.ஐ., முருகேசன் முன்னிலையில் கோவில் திறக்கப்பட்டது. காலை, 10:30 மணி முதல், 11:00 மணி வரை பூஜை செய்யப்பட்டது. இதில் ஒரு பிரிவினர் மட்டுமே வழிபாட்டில் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !