உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சரக்கு ரயிலில் வந்திறங்கிய 5,300 டன் அரிசி, கோதுமை

சரக்கு ரயிலில் வந்திறங்கிய 5,300 டன் அரிசி, கோதுமை

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் ரேஷன் கடைகளுக்கு தேவையான, அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட உணவுப்பொருட்கள், வடமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் தஞ்-சாவூரில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.அதன்படி, தெலுங்கானா மாநிலம், துருக்கியில் இருந்து, நேற்று, 2,700 டன் ரேஷன் அரிசி, 42 வேகன்கள் கொண்ட சரக்கு ரயில் மூலம், நாமக்கல் ரயில்வே ஸ்டேஷனுக்கு வரவழைக்கப்பட்டது. இதேபோல், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து, 41 வேகன்கள் கொண்ட சரக்கு ரயிலில், 2,600 டன் கோதுமை வரவழைக்கப்பட்-டது. பின், அங்கிருந்து கூட்ஸ் தொழிலாளர்கள் மூலம் லாரிகளில் ஏற்றி, தமிழ்நாடு உணவுப்பொருள் வாணிப கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை