உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / துப்புரவு பணிக்கு 6 பேட்டரி வண்டிகள்

துப்புரவு பணிக்கு 6 பேட்டரி வண்டிகள்

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்சாயத்தில், கலைஞர் நகர்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில், 4, 7, 12, 17வது வார்டு-களில், 37.89 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை அமைக்க, நேற்று பூமி பூஜை போடப்பட்டது. மேலும், 12வது வார்டில், 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்கவும் பூமி பூஜை போடப்பட்டது. எம்.எல்.ஏ., பொன்னுசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., ராமசுவாமி, டவுன் பஞ்., தலைவர் சேரன், துணைத்-தலைவர் அன்பழகன், கவுன்சிலர்கள் சுரேஷ், பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில், துப்புரவு பணிக்கு, 6 பேட்டரி வண்டிகள் வழங்கப்-பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ