உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வாள்வீச்சு, டென்னிஸ் போட்டி 700 மாணவர்கள் பங்கேற்பு

வாள்வீச்சு, டென்னிஸ் போட்டி 700 மாணவர்கள் பங்கேற்பு

நாமக்கல்: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நாமக்கல் பிரிவு சார்பில், கோவை மண்டல அளவிலான வாள் வீச்சு மற்றும் டென்னிஸ் போட்டி, நாமக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், இரண்டு நாட்கள் நடந்தன. அதில், நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த, பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், 700க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.நாமக்கல் மாவட்ட விளையாட்டு அலுவலர் கோகிலா தலைமை வகித்தார். மண்டல முதுநிலை மேலாளர் அருணா போட்டிகளை துவக்கி வைத்தார். பயிற்றுனர்கள் பிரேம்குமார், வினோதினி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி