உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / லேசர் மூலம் பிரசாரம் புரஜக்டர் பறிமுதல்

லேசர் மூலம் பிரசாரம் புரஜக்டர் பறிமுதல்

நாமக்கல்: நாமக்கல் - பரமத்தி சாலை, நகராட்சிக்கு சொந்தமான செலம்பகவுண்டர் பூங்காவில் ஒரு பகுதியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவற்றை சுற்றிலும் தகரத்தால் வேலி அமைத்துள்ளனர். இந்நிலையில், அந்த தகரத்தின் மீது, எதிரே உள்ள பலுாடா கடையில் இருந்து புரஜக்டரை பயன்படுத்தி, லேசர் மூலம் உதயசூரியன் சின்னத்தை பிரதிபலிக்க செய்துள்ளனர்.இதுகுறித்து, தகவலறிந்த தேர்தல் பறக்கும் படையின், புராஜக்டரை பறிமுதல் செய்தனர். அங்கு வந்த, அ.தி.மு.க.,வினர், அனுமதியின்றி விளம்பரம் செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கொ.ம.தே.க.,வினரும் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் இருதரப்பினரையும் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ