எருமப்பட்டி;''தி.மு.க., வெற்றி பெற்ற பின், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டு மீண்டும் அதிகப்படியான கடன் வழங்கப்பட்டுள்ளது,'' என,- எம்.பி., ராஜேஸ்குமார் பேசினார்.எருமப்பட்டி யூனியன், முட்டாஞ்செட்டி பகுதியில் ஒன்றிய செயலாளர் பாலசுப்ரமணியம் தலைமையில் பிரசார கூட்டம் நடந்தது. 'இண்டியா' கூட்டணி வேட்பாளர் மாதேஸ்வரனை ஆதரித்து, நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான, எம்.பி., ராஜேஸ்குமார், திரைப்பட நடிகர், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் வாகை சந்திரசேகர் ஆகியோர் ஓட்டு சேகரித்தனர்.கூட்டத்தில், எம்.பி., ராஜேஸ்குமார் பேசியதாவது:தி.மு.க., தன் தேர்தல் அறிக்கையில், 'மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கடன் தள்ளுபடி செய்யப்படும்' என உறுதியளித்தது. அதன்படி, மாநிலம் முழுதும், 2,756 கோடி ரூபாய் மகளிர் குழு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கம் மூலம் மீண்டும் புதிதாக மகளிர் குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் திட்டமும் தொடங்கி வைக்கப்பட்டு, கடன் அளவு, 10 லட்சம் ரூபாயிலிருந்து, 20 லட்சம் ரூபாயக உயர்த்தப்பட்டது.தி.மு.க., ஆட்சியில், மகளிருக்கு கட்டணமில்லா பஸ் பயணம், மகளிர் உரிமைத்தொகை, 1,000 ரூபாய், புதுமைப்பெண் திட்டம், பெண்கள் முன்னேற்ற வழி வகுக்கும் திட்டங்கள் இந்தியாவிற்கு முன்னோடி திட்டமாக உள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலினின் கரத்தை வலுப்படுத்த உதயசூரியனுக்கு ஓட்டளிப்பீர்.இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில், பேரூர் செயலாளர் சேர்மன் பழனியாண்டி, தலைமை செயற்குழு உறுப்பினர் பவித்திரம் கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் விமலா சிவக்குமார், சார்பு அணி நிர்வாகிகள் சித்தார்த், கிருபாகரன், பரிதி, கலைவாணன், ஒன்றிய பொருளாளர் ராஜலிங்கம், கிளை செயலாளர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.