நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், 18 மையங்களில் நடந்த, டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 தேர்வில், 4,188 பேர் பங்கேற்றனர். 1,580 பேர், 'ஆப்சென்ட்' ஆகினர்..நாமக்கல் மாவட்டத்தில், 18 மையங்களில், டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 பணிகளுக்கான போட்டித்தேர்வு, நேற்று நடந்தது. பொரசப்பாளையம் விநாயகா மேல்நிலைப்பள்ளி, எர்ணாபுரம் சி.எம்.எஸ்., பாலிடெக்னிக் கல்லுாரி ஆகிய மையங்களில் நடந்த குரூப்-1 தேர்வை, நாமக்கல் கலெக்டர் உமா ஆய்வு செய்தார். மேலும், எர்ணாபுரம் சி.எம்.எஸ்., பாலிடெக்னிக் கல்லுாரி மையத்தில் கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஒருவருக்கு, தேர்வு எழுத உதவியாக ஆசிரியர் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் மூலம் மாற்றுத்திறனாளி மாணவர் தேர்வு எழுதினார்.நேற்று காலை, 9:30 மணிக்கு தொடங்கி, மதியம், 12:45 மணி வரை நடந்தது. மாவட்டம் முழுதும், 5,768 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து, ஹால் டிக்கெட் பெற்றிருந்தனார். தேர்வர்கள் தேர்வு எழுத வசதியாக, மாவட்டம் முழுதும், 18 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வை கண்காணிக்க அறை கண்கா-ணிப்பாளர்கள், தலைமை கண்காணிப்பாளர்கள், கண்காணிப்பு குழுக்கள் மற்றும் பறக்கும் படையினர் நியமனம் செய்யப்பட்டி-ருந்தனர்.மேலும், கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி நபர்கள் தேர்வு எழுத உதவி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். மாவட்-டத்தில் நேற்று நடந்த குரூப்-1 போட்டித்தேர்வில், 4,188 பேர் பங்கேற்றனர். 1,580 பேர், 'ஆப்சென்ட்' ஆகினர்.