உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மலைப்பகுதி பெட்டி கடைகளில் காலாவதி குளிர்பானம் விற்பனை

மலைப்பகுதி பெட்டி கடைகளில் காலாவதி குளிர்பானம் விற்பனை

சேந்தமங்கலம்: கொல்லிமலை மலை கிராமங்களில் விற்கும் குளிர்பானங்களை உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுலா தலமாக கொல்லிமலை உள்ளது. இந்த யூனியனில், 14 பஞ்.,கள் உள்ளன. ஒவ்வெரு பஞ்சாயத்தும், 10 கி.மீ., துாரம் மலைகளின் நடுவே செல்கிறது. சோளக்காடு, செம்மேடு உள்ளிட்ட இடங்களில், சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்வதால், 100க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் செயல்படுகின்றன. இப்பகுதிகளை தவிர மற்ற கிராமங்களில் சிறு சிறு பெட்டிக்கடைகள் மட்டுமே உள்ளன.குறிப்பாக, ஒவ்வெரு கிராமத்திலும், வீட்டில் பெட்டி கடை வைத்து பலர் வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்கள் வாரத்திற்கு ஒருமுறை செம்மேடு, சோளக்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று குளிர்பானங்கள், வீட்டு உபயோக பொருட்களை வாங்கி வருகின்றனர். பின், கடைகளில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.இதுபோல், பெட்டிக்கடைகளில் விற்பனை செய்வதற்காக வாங்கி செல்லும் குளிர்பானங்கள் மலைப்பகுதியில் உள்ள கடைகளுக்கு விற்பனைக்கு செல்வதற்குள் காலாவதியாகி விடுகிறது. எனவே, உணவு பாதுகாப்பு துறையினர் மலைப்பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் விற்பனை செய்யப்படும் குளிர்பானங்களை ஆய்வு செய்ய வேண்டும் என, சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை