பசுந்தீவனம் உற்பத்தி: 5 நாள் இலவச பயிற்சி
மோகனுார்: 'வேளாண் அறிவியல் நிலையத்தில், 'பசுந்தீவன உற்பத்தி' குறித்து இலவச பயிற்சி முகாம், வரும், 19ல் துவங்கி, ஐந்து நாட்கள் நடக்கிறது' என, அதன் தலைவர் வேல்முருகன் தெரிவித்-துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், 'பசுந்தீவன உற்பத்தி மற்றும் பதப்படுத்-துதல்' என்ற தலைப்பில், இலவச பயிற்சி முகாம், வரும், 19ல் துவங்கி, 23 வரை, ஐந்து நாட்கள் இலவச பயிற்சி முகாம் நடக்கி-றது. காலை, 10:00 முதல், மாலை, 4:00 மணி வரை நடக்கும் முகாமில், பசுந்தீவனங்களின் வகைகள், அதில் உள்ள சத்துக்கள், இறவை, மானாவாரிக்கு உகந்த தீவனப்பயிர்கள் (விதை உறக்கம் அதை நிவர்த்தி செய்தல்), தானிய வகை, புல்வகை, பயறுவகை மற்றும் மரவகை தீவனப்பயிர்கள்.சாகுபடி முறைகள், ஊறுகாய் புல் தயாரித்தல், உலர்தீவனம் உற்பத்தி செய்தல், மண்ணில்லா பசுந்தீவனம் உற்பத்தி, அசோலா உற்பத்தி செய்தல், கால்நடைகளுக்கு பசுந்தீவனம் கொடுக்கும் அளவுகள், தீவன பயிர்களில் விதை உற்பத்தி செய்தல் குறித்து விளக்கப்படுகிறது. பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு சான்-றிதழ் வழங்கப்படும். முதலில் வரும், 25 பேருக்கு முன்னுரிமை வழங்கப்படும். இதில் விவசாயிகள், விவசாயம் சார்ந்த பணியா-ளர்கள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம்.விருப்பமுள்ளோர், 04286-266345, 9597746373, 7010580683 என்ற தொலைபேசி எண்களை தொடர்புகொண்டு, தங்களது பெயரை முன்பதிவு செய்து பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.