உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நான் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன் ஈரோடு தி.மு.க., வேட்பாளர் உருக்கம்

நான் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன் ஈரோடு தி.மு.க., வேட்பாளர் உருக்கம்

பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் நகர, தி.மு.க., சார்பில் தேர்தல் பணிமனை திறப்பு விழா நடந்தது. ஈரோடு லோக்சபா தொகுதி, தி.மு.க., வேட்பாளர் பிரகாஷ் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது: தேர்தல் அறிக்கையில் தெரிவித்த வாக்குறுதிகள், 95 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஈரோடு, கோவை, கரூர், உள்ளிட்ட மேற்கு மண்டலம் தான் தொழில் துறையில் இந்தியாவிற்கு முன்னோடியாக உள்ளது. நாம் கட்டும் ஜி.எஸ்.டி., வட மாநிலத்தில் கட்டுவதில்லை. 'இண்டியா' கூட்டனி வெற்றி பெற்றால், நாம் கட்டும் ஜி.எஸ்.டி., நமக்கு திருப்பி கிடைக்கும். நான் பணக்காரன் இல்லை; நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன். அ.தி.மு.க., வேட்பாளர், நேற்று வரை, பா.ஜ.,வில் இருந்தார். இந்த தொகுதி, தி.மு.க.,வின் கோட்டை என நிரூபிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மதுராசெந்தில் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை