விதிமீறி கடன் வசூல்: தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் வடக்கு ஒன்றிய, இந்திய மா.கம்யூ., கட்சி சார்பில், வெப்படை பஸ் ஸ்டாப் பகுதியில், நேற்று முன்தினம் மாலை, 7:00 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், வெப்படை பகுதியில் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள், சட்-டத்திற்கு புறம்பாக விதிமீறி கடன் வசூலில் ஈடுபடுகின்றன. இதனை கட்டுப்படுத்த வேண்டும். கள்ளங்காட்டுவலசு பகுதி மேட்டுக்கடையை சேர்ந்த வினோத்குமார் என்பவரை, தான் வாங்கிய கடனுக்காக தொடர்ந்து நிர்ப்பந்தம் செய்து தற்கொ-லைக்கு துாண்டிய மைக்ரோ பைனான்ஸ் நிறுவன அதிகாரிகள் மீது கொலை முயற்சி வழக்குப்பதிய வேண்டும் எனக்கோரி, கோசம் எழுப்பினர்.மாவட்ட செயற்குழு உறுப்பினர் பெருமாள், மாவட்ட குழு உறுப்பினர் துரைசாமி, ஒன்றிய செயலாளர் சந்திரமதி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.