உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தி.கோடு காந்தி ஆசிரமத்தில் கதர்பவன் திறப்பு விழா

தி.கோடு காந்தி ஆசிரமத்தில் கதர்பவன் திறப்பு விழா

திருச்செங்கோடு: திருச்செங்கோடு அடுத்த சித்தாளந்துார் புதுப்பாளையம் காந்தி ஆசிரமத்தின் நுாற்றாண்டு விழாவையொட்டி, ஆசிரம வளா-கத்தில் கதர் பவன் திறப்பு விழா நடந்தது. காந்தி ஆசிரம தலைவர் சிதம்பரம் தலைமை வகித்தார். பொருளாளர் குமார் வர-வேற்றார். பா.ஜ., மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் முன்-னிலை வகித்தார். இணை அமைச்சர் முருகன், நுாற்றாண்டு விழா கதர் பவன் விற்பனையகத்தை திறந்து வைத்தார். முதல் விற்ப-னையை, கதர் கிராம தொழில்கள் ஆணைய தலைவர் மனோஜ்-குமார் தொடங்கி வைக்க, இணை அமைச்சர் முருகன் பெற்றுக்-கொண்டார்.தொடர்ந்து, இணை அமைச்சர் முருகன் பேசியதாவது:திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தை நிறுவிய மூதறிஞர் ராஜாஜி, 9 ஆண்டுகள் இங்கு தங்கி ஆசிரமத்தை நடத்தினார். தேசத்தந்தை காந்தியடிகள், வினோபாய் பட்டேல், ராஜேந்திர பிரசாத், வெங்கட்ராமன், கக்கன், காமராஜர் உள்ளிட்ட அனைத்து தலைவர்களும், இந்த ஆசிரமத்தை பார்வையிட்டுள்ளனர். திருச்-செங்கோடு காந்தி ஆசிரமத்தின் நுாற்றாண்டு விழாவில், அனை-வரும் காதி பொருட்களை வாங்கி பயன்படுத்த வேண்டும் என்ற சங்கல்பத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன், கதர் கிராம தொழில்கள் ஆணைய மாநில இயக்குனர் சுரேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ