உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தண்ணீர் தட்டுப்பாடு அதிகரிப்பு: சிக்கனமாக பயன்படுத்த யோசனை

தண்ணீர் தட்டுப்பாடு அதிகரிப்பு: சிக்கனமாக பயன்படுத்த யோசனை

நாமகிரிப்பேட்டை, கோடைகாலம் துவங்கியதையடுத்து, பகலில் வெயில், இரவில் புழுக்கம் என மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், குடிநீர் பிரச்னையும் சேர்ந்து கொண்டது. நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்.,ல், தற்போது, 20 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே தண்ணீர் வழங்கப்படுகிறது. இருந்த போதும், 18 வார்டுக்கும் போதுமான அளவு தண்ணீர் கிடைப்பதில்லை. இதேபோல், சீராப்பள்ளி, ஆர்.புதுப்பட்டி, பட்டணம் உள்ளிட்ட டவுன் பஞ்.,களிலும் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது.இதனால், உள்ளூர் நீர் ஆதாரங்கள் மூலம் தண்ணீர் வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வார்டு தோறும் உள்ள போர்வெல், பொது கிணறுகள் மூலம் இப்பணி நடந்து வருகிறது. இதேபோல், கிராம ஊராட்சிகளில் தண்ணீர் தட்டுப்பாடு இருப்பதால் மக்கள் இரவில் சைக்கிளில் தண்ணீர் எடுத்து வருகின்றனர். அதேபோல், தனியார் டேங்கர் லாரிகளில் தண்ணீர் விற்பனையும் அதிகரித்துள்ளது.ஏப்ரல், மே மாதங்களில் தண்ணீர் பிரச்னை இன்னும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தவும் யோசனை தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை