கொங்கண சித்தர் குகையில் நாளை மண்டல பூஜை நிறைவு
மல்லசமுத்திரம்: வையப்பமலையில் உள்ள, கொங்கணசித்தர் குகையில் நாளை மண்டல பூஜை நிறைவு பெறுகிறது.மல்லசமுத்திரம் அருகே, வையப்பமலை சுப்ரமணிய சுவாமி மலைக்குன்றின் தெற்குபகுதியில் அமைந்துள்ள, ராகுகேது பரிகார ஸ்தலமாக விளங்கும் கொங்கணசித்தர் குகையில், கடந்த 19ம் தேதி பிராண பிரதிஷ்டை நடைபெற்று, கும்பாபி ேஷகம் நடந்தது. நாளை (31) 12ம் நாள் மண்டல பூஜை நிறைவு நாளையொட்டி, சர்வதோச நிவாரண கணபதி மற்றும் கொங்கண சித்தருக்கு மதியம் 12:00 மணிக்கு சிறப்பு அபி ேஷக ஆராதனை நடைபெறும்.