உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் இடமாற்றம்மீட்பு குழுவினர் கண்டன ஆர்ப்பாட்டம் ராசிபுரம்:ராசிபுரம் பஸ் ஸ்டாண்ட் இடமாற்றத்தை கண்டித்து மீட்பு குழுவினர், நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராசிபுரத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, அணைப்பாளையம் ஊராட்சி, புறவழிச்சாலை அருகே புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க, நகராட்சி நிர்வாகம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்

ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் இடமாற்றம்மீட்பு குழுவினர் கண்டன ஆர்ப்பாட்டம் ராசிபுரம்:ராசிபுரம் பஸ் ஸ்டாண்ட் இடமாற்றத்தை கண்டித்து மீட்பு குழுவினர், நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராசிபுரத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, அணைப்பாளையம் ஊராட்சி, புறவழிச்சாலை அருகே புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க, நகராட்சி நிர்வாகம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்

ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் இடமாற்றம்மீட்பு குழுவினர் கண்டன ஆர்ப்பாட்டம்ராசிபுரம்:ராசிபுரம் பஸ் ஸ்டாண்ட் இடமாற்றத்தை கண்டித்து மீட்பு குழுவினர், நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராசிபுரத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, அணைப்பாளையம் ஊராட்சி, புறவழிச்சாலை அருகே புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க, நகராட்சி நிர்வாகம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், புதிய பஸ் ஸ்டாண்டை இடமாற்றம் செய்யக்கூடாது என, தி.மு.க.,வை தவிர அணைத்து கட்சியினர் மற்றும் பல்வேறு சங்கங்கள், அமைப்புகள், வியாபாரிகள் நலச்சங்கம், வணிகர் சங்கம் உள்ளிட்டவை தொடர்ந்து போராடி வருகின்றன.மேலும், 'ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் மீட்பு குழு' என்ற பெயரில் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகினறனர். ஆனால், நகராட்சி நிர்வாகம், 'அது புதிய பஸ் ஸ்டாண்ட் இல்லை. இடமாற்றமும் இல்லை. புதிய பஸ் ஸ்டாண்ட் தற்போது இருக்கும் இடத்திலேயே இருக்கும். புதிதாக அமைப்பது புறநகர் பஸ் ஸ்டாண்ட்' என கூறியுள்ளனர். அதுமட்டுமின்றி புறநகர் பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிக்கு டெண்டரும் விடப்பட்டுள்ளது.இந்நிலையில், அணைப்பாளையம் பகுதியில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, அபராதத்துடன், தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, நேற்று பஸ் ஸ்டாண்ட் மீட்பு குழுவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அ.தி.மு.க., நகர செயலாளர் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். தமிழ்நாடு வணிகர்கள் சங்க பேரமைப்பின் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன், ம.தி.மு.க., மாவட்ட அவைத்தலைவர் ஜோதிபாசு, சி.பி.எம்., மாவட்ட செயலாளர் கந்தசாமி, பா.ம.க., மாவட்ட செயலாளர் பொன்னுசாமி, பா.ஜ., மாவட்ட பொதுச்செயலாளர் சேதுராமன், ராசிபுரம் பஸ் ஸ்டாண்ட் கடை வியாபாரிகள் நலச்சங்க தலைவர் மாதேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில், ராசிபுரம் நகர மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் பஸ் ஸ்டாண்டை மாற்றும் திட்டத்தை ரத்து செய். அணைப்பாளையம் ஏரி, ஆயக்கட்டு உரிமை விவசாய நிலங்களை அரசு விதிமுறைகளுக்கு புறம்பாக வகைப்பாடு மாற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு என, கோஷமிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை