திருச்செங்கோடு ஒன்றியத்தில் 14 பள்ளிகளில் எஸ்.எம்.சி., மறுகட்டமைப்பு நிர்வாகிகள் தேர்வு
திருச்செங்கோடு: திருச்செங்கோடு வட்டார வளமையத்துக்குட்பட்ட, 14 அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில், மூன்றாவது கட்டமாக பள்ளி மேலாண் குழு நிர்வாகிகளை மற்றும் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஒவ்வொரு பள்ளிக்கும், பெற்றோர், முன்னாள் மாணவர்கள் உறுப்பினர்களாகவும், அவர்களுக்குள்ளாக தலைவர், உப தலைவர் என, மொத்தம், 24 உறுப்பினர்கள் ஒவ்வொரு பள்ளியிலும், பள்ளி மேலாண் குழு கட்டமைப்பில் செயல்படுவார்கள்.அனைத்து பள்ளிகளிலும், இது போன்ற அமைப்புகளால், மாணவர்களுடைய கல்வித்தரம் உயர்வதற்கும், ஒழுக்க சிந்தனை மேம்படுவதற்கும், தடையில்லா மாணவர் வருகை உறுதிப்படுத்தும் வகையிலும், பள்ளி உள் கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், அனைத்து பெற்றோருக்கும் முன்னுரிமை பட்டியலில் உள்ளபடி வழங்கப்பட்டு, ஜனநாயக முறைப்படி பள்ளி மேலாண் குழு மறு கட்டமைப்பு நடந்தது.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி பார்வையிட்டு, உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.