மேலும் செய்திகள்
விபத்து நடந்த இடத்தில் வேகத்தடை
09-Dec-2024
வெண்ணந்துார்: ராசிபுரம் பகுதியில் இருந்து குட்டலாடம்பட்டி வழியாக சேலம் செல்லும் ரோட்டில், காளியம்மன் கோவில் அருகே உள்ள வளைவு பகுதியில் விபத்தை தடுக்க வேகத்தடை அமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.வெண்ணந்துார் யூனியனுக்கு உட்பட்ட, ஆர்.புதுப்பாளையம் பஞ்., பகுதியில், ராசிபுரத்தில் இருந்து குட்டலாடம்பட்டி வழி-யாக சேலம் செல்லும் ரோட்டில், நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. மல்லூர், பனமரத்துப்பட்டி போன்ற பகுதி வழியாக எளிதாக சேலம் செல்ல வழி இருப்பதால், வாகன போக்குவரத்தும் பெருகி வருகிறது. இந்த சாலையில் காலை மற்றும் மாலை நேரத்தில், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் அதிகம் பயணிக்கின்றனர்.இந்த சாலை வளைவு பகுதிகள் அதிகம் கொண்டது. காளி-யம்மன் கோவில் பகுதி சாலை வளைவில், சிறு சிறு விபத்துக்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இதனால் பலர் காயமடைந்துள்ளனர். இப்பகுதியில் பெரும் விபத்து நடப்பதற்கு முன், நெடுஞ்சாலைத்-துறை சார்பில், வேகத்தடை அமைக்க வேண்டும் என, அப்பகுதி-யினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
09-Dec-2024