உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மாணவர் பலி: ரூ.20 லட்சம் இழப்பீடு கேட்டு ஆர்ப்பாட்டம்

மாணவர் பலி: ரூ.20 லட்சம் இழப்பீடு கேட்டு ஆர்ப்பாட்டம்

நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன், அனைத்து வாகன ஓட்டுனர்கள் தொழிற்சங்கம், பத்து ரூபாய் இயக்கம் சார்பில், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில தலைவர் பத்மராஜ் தலைமை வகித்தார். பத்து ரூபாய் இயக்க மாநில பொதுச்செயலாளர் நல்வினை விஸ்வராஜ் துவக்கி வைத்தார்.ஆர்ப்பாட்டத்தில், எருமப்பட்டி யூனியன், வரகூர் அரசு மேல்நி-லைப்பள்ளியில், கடந்த, 23ல், மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில், மாணவர் ஆகாஷ் உயிரிழந்தார். சாமானிய மக்களின் நலனிற்காகவும், மாணவர் ஆகாஷ் மரணத்திற்கு நீதி வழங்க வேண்டும். அவரின் குடும்பத்தினர் வாழ்வாதாரத்திற்கு வழி-வகை செய்ய வேண்டும். இதில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நட-வடிக்கை எடுக்க வேண்டும். ஆகாஷின் குடும்பத்தில் ஒருவ-ருக்கு, அரசு வேலை வழங்க வேண்டும். இழப்பீடாக, 20 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். பள்ளி மாணவ, மாணவியரின் பாது-காப்பை உறுதி செய்ய வேண்டும் என, கோஷம் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை