மேலும் செய்திகள்
இன்று இனிதாக... திருப்பூர்
08-Sep-2024
மோகனுார்: மோகனுார் டவுன் பஞ்., சுப்பிரமணியபுரத்தில், குறிக்கார கருப்-பண்ண சுவாமி, காமாட்சியம்மன், முத்துக்குமார சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் திருப்பணி முடிவடைந்ததையடுத்து, நாளை கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடக்கிறது. விழா-வையொட்டி, இன்று காலை, 8:00 மணிக்கு, மகா கணபதி யாகம், கோ பூஜை, மாலை, 4:00 மணிக்கு, விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி, முதற்கால யாக பூஜை, இரவு, 8:00 மணிக்கு கண் திறப்பு, 9:00 மணிக்கு, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது.நாளை அதிகாலை, 5:00 மணிக்கு, இரண்டாம் காலயாக பூஜை, 6:45 மணிக்கு கடம் புறப்பாடு, 7:00 மணிக்கு, சக்தி விநா-யகர், குறிக்கார கருப்பண்ண சுவாமி, காமாட்சியம்மன் முத்துக்கு-மார சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடக்கி-றது.தொடர்ந்து, தீபாராதனை, சிறப்பு அலங்காரம், பிரசாதம் வழங்-குதல் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவில் கலந்துகொள்ளும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், ஊர்பொதுமக்கள் செய்துள்ளனர்.
08-Sep-2024