உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ராசிபுரத்தில் ஒரே நாளில் 100 கொடி கம்பம் அகற்றம்

ராசிபுரத்தில் ஒரே நாளில் 100 கொடி கம்பம் அகற்றம்

ராசிபுரம், தமிழகத்தில் உள்ளாட்சி துறைக்கு சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கட்சிகள், ஜாதி, மத ரீதியிலான கொடி கம்பங்களை, 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, ஜன., 27ல் உத்தரவிட்டது. இதையடுத்து மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு, கிளை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், தங்கள் பகுதிகளில் உள்ள தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, உள்ளாட்சி துறைக்கு சொந்தமான இடங்களிலும், பொது இடங்களிலும் வைத்துள்ள கட்சி கொடி கம்பங்களை தாங்களே முன்வந்து, 15 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது.ஆனால், கட்சியினர் கொடி கம்பங்களை அகற்றாமல் இருந்தனர். இந்நிலையில், நெடுஞ்சாலைத்துறை ராசிபுரம் உட்கோட்டம் சார்பில், 4க்கும் மேற்பட்ட குழுக்கள், நேற்று கொடி கம்பங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதில், ராசிபுரம் நகராட்சி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே வைக்கப்பட்டிருந்த, தி.மு.க.,-அ.தி.மு.க.,-பா.ம.க.,-தே.மு.தி.க.,-வி.சி.க., உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் கொடி கம்பங்களை, 'கிரேன்' மூலம் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றினர். நேற்று ஒரே நாளில், 100க்கும் மேற்பட்ட கொடி கம்பங்களை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர்.இதேபோல், கொல்லிமலை சோளக்காடு, செம்மேடு உள்ளிட்ட இடங்களில் நடப்பட்டிருந்த, 40 கொடி கம்பங்களை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை