மேலும் செய்திகள்
நாமக்கல் உழவர் சந்தையில் 59 டன் காய்கறி விற்பனை
15-Sep-2025
நாமக்கல், ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையையொட்டி, நாமக்கல் உழவர் சந்தையில், இரண்டு நாட்களில், 130 டன் காய்கறிகள், 58.25 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகின.நாமக்கல், கோட்டை மெயின் சாலையில், உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினமும், அதிகாலை, 5:00 முதல், 10:00 மணி வரை, நாமக்கல் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள விவசாயிகள், தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறி, பழங்கள் மற்றும் கீரை வகைகளை அறுவடை செய்து, நேரடியாக விற்பனை செய்கின்றனர். பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். வழக்கமாக, வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகமான பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வருகை தந்து, தங்களுக்கு தேவையான காய்கறி, பழங்களை வாங்கி செல்வது வழக்கம்.ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜையையொட்டி, கடந்த இரண்டு நாட்களாக வழக்கத்தைவிட உழவர் சந்தையில் விறுவிறுப்பாக வியாபாரம் நடந்தது. இரண்டு நாட்களில், 350 விவசாயிகள், உழவர் சந்தைக்கு காய்கறிகளை விற்பனைக்கு கொண்டுவந்திருந்தனர். அதில், 99,435 கிலோ காய்கறிகள், 30,935 கிலோ பழங்கள், 110 கிலோ பூக்கள் என மொத்தம், ஒரு லட்சத்து, 30,480 கிலோ எடையுள்ள விளைபொருட்கள் உழவர் சந்தைக்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. அவற்றை, 26,096 பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வந்து, தங்களுக்கு தேவையான காய்கறி, பழங்களை வாங்கி சென்றனர். அதன் மூலம், 58 லட்சத்து, 25,655 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று, தக்காளி ஒரு கிலோ, 22 ரூபாய், கத்தரி, 56, வெண்டை, 30, புடலங்காய், 45, பீர்க்கங்காய், 54, பாகற்காய், 50, அவரை, 80, சின்ன வெங்காயம், 34, பெரிய வெங்காயம், 30, என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது.
15-Sep-2025