மேலும் செய்திகள்
கார் மோதி பெயின்டர் பலி
29-Dec-2024
சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அருகே, துத்திக்குளத்தில் செல்லியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் அருகே உள்ள மரத்தில், நேற்று முன்தினம் இரவு, மலை தேனீக்கள் அங்கும் இங்கும் சுற்றி வந்துள்ளன. அப்போது அந்த வழியாக சென்றவர்கள், தேனீக்கள் மீது கல் வீசியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த தேனீக்கள், அந்த வழியாக சென்ற, 15 பேரை கொட்டியது. இதில் காயமடைந்த, 10 பேர் சேந்தமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 5 பேர் துத்திக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாமக்கல் தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று தேனீக்களை அகற்றினர்.
29-Dec-2024