உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மது விற்ற 2 பேர் கைது

மது விற்ற 2 பேர் கைது

குமாரபாளையம் :குமாரபாளையத்தில், அரசு நிர்ணயம் செய்த நேரத்திற்கு முன்பாகவே அதிக விலைக்கு மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ., பிரபாகர் உள்ளிட்ட போலீசார், சேலம் சாலை, குப்புசாமி கேண்டீன் அருகே உள்ள பார் அருகே கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு மது விற்றுக்கொண்டிருத்த டீ மாஸ்டர் வேணுகோபால், 52, பார் ஊழியர் அருண்குமார், 42, ஆகிய இருவரை கைது செய்து, மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.வேணுகோபால் மீது ஏற்கனவே மது விற்ற வகையில், 3 வழக்குகளும், அருண்குமார் மீது நான்கு வழக்குகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ