உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஆடு திருடிய 2 பேர் கைது

ஆடு திருடிய 2 பேர் கைது

ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த தேங்கல்பாளையம் பஞ்சாயத்து, கரடியானுார் பகுதியை சேர்ந்தவர் எல்லப்பன், 70; கூலித்தொழிலாளி. இவர், 5க்-கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்-தினம் இரவு, ஆடுகளை வீட்டின் முன் கட்டி வைத்துவிட்டு துாங்க சென்றார். நேற்று அதிகாலை, டூவீலரில் வந்த இருவர், ஒரு ஆட்டை திருடிச்சென்றனர். அப்பகுதியில் ரோந்து சென்ற போலீசார், டூவீலரில் ஆட்டுடன் வந்த இருவரை பிடித்து விசாரித்-தனர். அப்போது, சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டியை சேர்ந்த பெரியசாமி மகன் விஜயன், 21, அயோத்தியாபட்டணத்தை சேர்ந்த நல்லகவுண்டர் மகன் குணசேகரன், 20, என்பதும்; இரு-வரும் எல்லப்பன் வீட்டில் ஆட்டை திருடி வந்ததும் தெரியவந்-தது. இதையடுத்து, ராசிபுரம் போலீசார், இருவரையும் கைது செய்-தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ