உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வாகனம் மோதி 2 மூதாட்டிகள் பலி

வாகனம் மோதி 2 மூதாட்டிகள் பலி

குமாரபாளையம்: குமாரபாளையம் தேசிய நெடுஞ்சாலை, பல்லக்காபாளையம் பகுதி கொல்லப்பட்டி பிரிவு அருகே, கடந்த, 11 காலை, 6:00 மணிக்கு, 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் சாலையில் நடந்து சென்றார். அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்தில் பலியானார். இதுகுறித்து, வி.ஏ.ஓ., கோவிந்தராஜ் புகார் அளித்துள்ளார்.இதேபோல், கடந்த, 10ல் தேசிய நெடுஞ்சாலை, டீச்சர்ஸ் காலனி அருகே, 65 வயதுள்ள மூதாட்டி ஒருவர் சாலையை கடந்துள்ளார். அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்தில் பலியானார். இதுகுறித்து, வி.ஏ.ஓ., அரசு, போலீசில் புகாரளித்தார். இந்த, 2 சம்பவங்கள் குறித்தும், குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி