உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / செயற்கை நிறமூட்டி பூசிய 2 கிலோ சிக்கன் பறிமுதல்

செயற்கை நிறமூட்டி பூசிய 2 கிலோ சிக்கன் பறிமுதல்

எருமப்பட்டி: எருமப்பட்டி, மோகனுார் பகுதிகளில் உள்ள சில்லி சிக்கன் கடை-களில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்-கொண்டனர்.நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் அருண் உத்தரவுப்படி, எருமப்பட்டி உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் செல்வகுமார் தலைமையில் அதிகாரிகள், நேற்று எருமப்பட்டி, மோகனுார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உணவகங்களில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மோகனுாரில் உள்ள சில்லி சிக்கன் கடையில், செயற்கை நிறமூட்டி பூசப்பட்டு சில்லி போட வைத்தி-ருந்த, 2 கிலோ சிக்கன், மீன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், 5 கடைகளுக்கு, தலா, 1,000 ரூபாய் அபராதம் விதித்து, நோட்டீஸ் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ