மேலும் செய்திகள்
லாரி சக்கரத்தில் சிக்கி கட்டட தொழிலாளி பலி
14-Sep-2025
திருச்செங்கோடு:மொபட் மீது கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில், இரண்டு பேர் பலியாகினர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வாலரைகேட், எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் கலியபெருமாள், 65; திருச்செங்கோடு, நாராயணபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து, 65. இருவரும், பழைய டயர் வியாபாரம் செய்து வந்தனர். நேற்று காலை, 7:30 மணிக்கு, 'டி.வி.எஸ்., எக்ஸல் சூப்பர்' மொபட்டில் ஹெல்மெட் அணியாமல், மலைசுற்று பாதை வழியாக, நாமக்கல் சாலையில் சென்று கொண்டிருந்தனர். சாலையில் மழைநீர் தேங்கியிருந்ததால் அதில் செல்லாமல், வலதுபுறம் செல்வதற்காக மொபட்டை திருப்பிய போது, எதிரே நாமக்கல்லில் இருந்து கோவை நோக்கி சென்ற கன்டெய்னர் லாரியின் பின்பக்க சக்கரத்தில் மொபட் சிக்கியது. இதில், கீழே விழுந்ததில் சக்கரத்தில் சிக்கிய கலியபெருமாள், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். படுகாயமடைந்த மாரிமுத்து தனியார் மருத்துவமனையில் இறந்தார். திருச்செங்கோடு டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
14-Sep-2025