மேலும் செய்திகள்
வெற்றிலை விலை உயர்வு
16-Dec-2025
தேச தலைவர்கள் ஓவியம் புதுப்பிக்க கோரிக்கை
16-Dec-2025
உலக நன்மைக்காக சங்காபிஷேக பூஜை
16-Dec-2025
நாமக்கல்: ''பதற்றமான ஓட்டுச்சாவடிகளை கண்காணிக்க, மத்திய அரசு பணியாளர்கள், 222 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்,'' என, நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் உமா பேசினார்.நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் பணியாற்றும், 222 நுண் பார்வையாளர்களுக்கான (மைக்ரோ அப்சர்வர்) பயிற்சி முகாம் நடந்தது. தேர்தல் பொதுப்பார்வையாளர் ஹர்குன்ஜித்கவுர் முன்னிலை வகித்தார். மாவட்ட தேர்தல் அலுவலர் உமா தலைமை வகித்து பேசியதாவது:இந்திய தேர்தல் ஆணையம் மூலம் லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், நாமக்கல் லோக்சபா தொகுதிக்கு, பொதுப்பார்வையாளர், போலீஸ் பார்வையாளர் மற்றும் செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆறு சட்டசபை தொகுதிகளில், 53 ஓட்டுப்பதிவு மையங்களில், 174 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. அந்த ஓட்டுச்சாவடிகளை கண்காணிக்க பேங்குகள் மற்றும் மத்திய அரசு பணியாளர்களை நுண்பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.அவர்கள், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பதற்றமான ஓட்டுச்சாவடிகளை கண்காணிக்க பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள ஓட்டுச்சாவடிகளில், அனைத்து தேர்தல் முன்னேற்பாடு பணிகளையும் முறையாக மேற்கொள்ள வேண்டும். ஓட்டுப்பதிவு நாளன்று மாதிரி ஓட்டுப்பதிவு நடத்தி, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சீர்நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். நுண்பார்வையாளர்கள் அனைவரும் நேர்மையாகவும், துாய்மையாகவும் தேர்தல் நடத்த உறுதுணையாக இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.டி.ஆர்.ஓ., சுமன், கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் அருளரசு உள்பட பலர் பங்கேற்றனர்.
16-Dec-2025
16-Dec-2025
16-Dec-2025