உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ரூ.23 லட்சத்திற்குபருத்தி வர்த்தகம்

ரூ.23 லட்சத்திற்குபருத்தி வர்த்தகம்

ரூ.23 லட்சத்திற்குபருத்தி வர்த்தகம்மல்லசமுத்திரம்:திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின், மல்லசமுத்திரம் கிளையில் வாரந்தோறும் புதன்கிழமை பருத்தி ஏலம் நடக்கிறது. அதன்படி, நேற்று நடந்த ஏலத்தில் மங்களம், சின்னகாளிப்பட்டி, பள்ளக்குழி அக்ரஹாரம், செண்பகமாதேவி, மேல்முகம், ராமாபுரம், பருத்திப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 60 கிலோ எடைகொண்ட, 1,012 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில், பி.டி., ரகம் குவிண்டால், 7,812 ரூபாய் முதல், 8,690 ரூபாய்; கொட்டு பருத்தி, 3,955 ரூபாய் முதல், 4,625 ரூபாய் என, மொத்தம், 23 லட்சம் ரூபாய்க்கு பருத்தி ஏலம் நடந்தது. அடுத்த ஏலம் வரும், 26ல் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !