உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வு 2,696 பேர் பங்கேற்பு; 450 பேர் ஆப்சென்ட்

இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வு 2,696 பேர் பங்கேற்பு; 450 பேர் ஆப்சென்ட்

திருச்செங்கோடு: தமிழக அரசின் சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில், தமி-ழகம் முழுவதும், இரண்டாம் நிலை காவலர்கள், 2,833 பேர், ஜெயிலர்கள். 180 பேர், தீயணைப்பாளர், 631பேர் என, 3,644 காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது. நாமக்கல் மாவட்டத்தில், திருச்செங்கோடு விவேகானந்தா கல்வி நிறுவன வளாகத்தில் எழுத்து தேர்வு நடந்தது.காலை, 9:30 மணிக்கு தேர்வு அறைக்குள் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், காலை, 7:30 மணி முதல் தேர்-வர்கள் வரத்தொடங்கினர்.நீண்ட வரிசையில் நின்று முழுமையான பரிசோதனைக்கு பின் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். காலதாமதமாக வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். காலை, 10:00 மணி முதல், 12:30 மணி வரை எழுத்து தேர்வு நடந்தது. நாமக்கல் மாவட்டத்தில் ஆண்கள், 2,606 பேர், பெண்கள், 540 பேர் என, 3,146 பேர் விண்ணப்பித்திருந்தனர். 2,696 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 450 பேர் தேர்வெழுத வரவில்லை.நாமக்கல், செல்லப்பன் காலனியை சேர்ந்த செல்வகுமார் மனைவி திவ்யா, தன் நான்கு மாத குழந்தையுடன் தேர்வெழுத வந்திருந்தார். தன் சின்னம்மாவிடம் குழந்தையை ஒப்படைத்து-விட்டு தேர்வெழுத சென்றார்.துாங்கிக்கொண்டிருந்த குழந்தையுடன், திவ்யாவின் சின்னம்மா மரத்து நிழலில் காத்திருந்தார். தேர்வெழுத வந்தவர்கள் அணிந்தி-ருந்த பெல்ட், கைகுட்டை மற்றும் தடை செய்யப்பட்ட எந்த பொருளாக இருந்தாலும் வெளியேயே வைத்துவிட்டு வரும்படி அறிவுறுத்தப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை