உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / திருட முயன்ற 3 பேர் சிக்கினர்

திருட முயன்ற 3 பேர் சிக்கினர்

பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம் அடுத்த புதுப்பாளையம், புளியங்காடு, ஓம் சக்தி நகர், அலமேடு பகுதியில், கடந்த, 12 இரவு, டவுசர் அணிந்துகொண்டு, கையில் ஆயுதங்களுடன் டூவீலரில் வந்த மர்ம நபர்கள், சிலர் பூட்டியிருந்த வீட்டை நோட்டமிட்டு, கதவை உடைத்து உள்ளே சென்றனர். தொடர்ந்து பீரோவை திறந்து பார்த்த போது நகை, பணம் ஏதும் இல்லாததால் ஏமாற்றமடைந்தனர். பின், கையில் கிடைத்த பொருட்களை திருடி சென்றுள்ளனர்.இந்த கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு, பள்ளிப்பாளையம் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று இரவு, வீட்டில் பொருட்களை திருடி சென்ற, மூன்று பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை