உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பி.டி.ஓ., கடத்தல் வழக்கில் மேலும் 3 பேர் கைது

பி.டி.ஓ., கடத்தல் வழக்கில் மேலும் 3 பேர் கைது

பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் பி.டி.ஓ., கடத்தல் வழங்கில் தலைமறைவாக இருந்த, மூன்று பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் பஞ்., யூனியன் பி.டி.ஓ.,வாக பணிபுரிந்தவர் பிரபாகரன், 54; காடச்சநல்லுார் பஞ்., செயலாளராக பணிபுரிந்தவர் நந்தகுமார், 42; இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, நந்தகுமார் மற்றும் இவரது நண்பர்கள் ஈஸ்வரன், ஈரோட்டை சேர்ந்த சிவா உள்பட சிலர், கடந்த, 4ல் பணிமுடிந்து காரில் சென்ற பி.டி.ஓ., பிரபாகரனை கடத்தினர்.போலீசார் தேடுவதை அறிந்து அவரை பாதி வழியில் இறக்கிவிட்டு தப்பினர். பின், பி.டி.ஓ.,வை கடத்திய காடச்சநல்லுார் பஞ்., செயலாளர் நந்தகுமார், 42, ஈரோட்டை சேர்ந்த சிவா, 29, ஆகிய இருவரை, கடந்த, 7ல் போலீசார் கைது செய்தனர். தலைமறைவான, மூவரை தேடி வந்தனர்.இந்நிலையில், தலைமறைவாக இருந்த கீழ்காலனியை சேர்ந்த ஈஸ்வரன், 33, சிறுமொளசி பகுதியை சேர்ந்த மணிகண்டன், 29, சிவகங்கையை சேர்ந்த மதுரபாண்டி, 34, ஆகிய மூவரும், ஓடப்பள்ளி தடுப்பணை பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், மூவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த காரையும் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை